Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்தனுஷ் எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

தனுஷ் எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படம் கடந்த நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில், தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments