Tuesday, March 17, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” படப்பிடிப்பு நிறைவு

தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” படப்பிடிப்பு நிறைவு

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டில்லியில் துவங்கியது. ஆனந்த் எல் ராய் ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, ஐதராபாத், டெல்லி போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இந்த படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments