Friday, March 20, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டெஸ்ட் கிரிக்கெட்: 471 ரன்கள் குவித்தும் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்: 471 ரன்கள் குவித்தும் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன்- தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.

முன்னதாக இந்த இன்னிங்சில் 3 வீரர்கள் சதமடித்தும் இந்திய அணியால் 471 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 வீரர்கள் சதமடித்தும் ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்கள் அடித்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அந்த பட்டியல்:

1. இந்தியா – 471 ரன்கள்

2. தென் ஆப்பிரிக்கா – 475 ரன்கள்

3. ஆஸ்திரேலியா – 494 ரன்கள்

4. வெஸ்ட் இண்டீஸ் – 497 ரன்கள்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments