டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலிருந்து பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய டெங்கு தொற்று பரவல் காரணமாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (Lady Ridgeway Hospital) சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதற்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, ஒவ்வொரு முறையும் குழந்தைகளை சிகிச்சைக்காகவோ அல்லது வைத்திய பரிசோதனைக்காகவோ வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போது பின்வரும் 05 ஆவணங்களை எடுத்து வருமாறு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.
1. தனிப்பட்ட சுகாதார எண் (PHN) / பார்கோடு அட்டை (Barcode Card)
2. குழந்தை சுகாதார மேம்பாட்டு பதிவு (CHDR) / எடை பதிவு புத்தகம்
3. மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பற்றிய விவரங்கள். (ஒவ்வாமை பதிவுகள் (மருந்து / உணவு)
4. வைத்திய புத்தகங்கள்
5.வைத்தியசாலை வெளியேற்ற அட்டைகள் அல்லது நோயறிதல் அட்டைகள். (டிஸ்சார்ஜ் கார்டுகள் / நோயறிதல் அட்டைகள்)
சீமாட்டி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பை நாடுகிறது, மேலும் தகவல் தேவைப்பட்டால், எங்கள் வைத்தியசாலையின் இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்: 011 2693711 (307).


