Friday, March 20, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்டூரிஸ்ட் ஃபேமிலி உருவாக்கிய படக்குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் – நானி

டூரிஸ்ட் ஃபேமிலி உருவாக்கிய படக்குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் – நானி

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் நானி படக்குழுவை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” மிகவும் சிம்பிலான, மனதிற்கு இதமான படங்கள் தான் நமக்கு தேவை அதனை டூரிஸ்ட் ஃபேமிலி பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தை எடுத்த கலைஞர்களுக்கும், நடித்த நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments