Friday, March 13, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் - அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல்

டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் – அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல்

அமெரிக்காவின் தேசிய கீதமிசைக்கப்பட்டவேளை உரத்து கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதிமொழியெடுத்துள்ளனர்.

ஒட்டாவாவில் அமெரிக்க கனடா ஹொக்கி அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளை கனடா ரசிகர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளனர்.

கனடாவிற்கு எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளினதும் அணிகளிற்கும்இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சலிட்டுள்ளனர்.

வழமையாக அமைதியான முறையில் நடந்துகொள்ளும் கனடா ரசிகர்கள் கூச்சலிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை,டிரம்பின் வரிகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு கனடா ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களிற்கும் டிரம்ப் விதித்துள்ள ஏற்றுமதி செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது.

வலுச்சக்தி பொருட்களிற்கு டிரம்ப் பத்துவீத வரியை விதித்துள்ளார்.

இந்த வரிகள் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எச்சரித்துள்ள பொருளாதார நிபுணர்கள் இந்த வரிகள் பல மாதங்களிற்கு தொடர்ந்தால் அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும் என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வரிகள் குறித்த சீற்றம் கனடாவில் அதிகரித்து வருகின்றது அதேவேளை அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராடவேண்டும் என்ற மனோநிலையும் காணப்படுகின்றது.

கனடா பிரதமர் இந்த மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்களில் பலர் இந்த புதிய வரிகளால் பாதிக்கப்படுவோம்,சில கடினமான காலங்களை நாங்கள் எதிர்கொள்வோம், ஏனையவர்கள் குறித்து அக்கறை கொண்டு செயற்படுங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்

தற்போது கனடாவை தெரிவு செய்யும் தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியப்படுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை கனடாவின் சிலர் ஏற்கனவே செவிமடுத்துள்ளனர்.

கனடாவின் சமூக ஊடகங்களில் அமெரிக்க பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது என்ற வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன.

சிலர் அமெரிக்காவிற்கான பயணங்களை இரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments