Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு

ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது

இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது .

எனவே காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட்டது .

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு பெற உள்ளது . இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments