Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி நிதிய நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மறுப்பு

ஜனாதிபதி நிதிய நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மறுப்பு

அனுராதபுரத்தில் உள்ள எப்பாவல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஒரு கட்டிடத் திட்டத்திற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். நிதி முறைகேடு தொடர்பாக தன்னை தொடர்புபடுத்த முயற்சிக்கும் ஊடக அறிக்கைகள் தவறானவையாகும். இந்த குற்றச்சாட்டுக்கள் போலி தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கான கட்டடத்தை நிர்மாணிக்கும் போது நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments