Sunday, March 8, 2026
spot_img
HomeUncategorizedசெம்பியன்பற்று வடக்கில் கரைவலை வாடி தீயிட்டு அழிப்பு!

செம்பியன்பற்று வடக்கில் கரைவலை வாடி தீயிட்டு அழிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் நேற்று (15) இரவு கரைவலை வாடி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் அமைந்திருக்கின்ற அல்பிரட் என்பவருக்கு சொந்தமான கரைவலை வாடியே நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான கரைவலை தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் இடம் பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இவ்வாறு இனந்தெரியாதவர்களால் குறித்த வாடி எரிக்கப்பட்டுள்ளது.

வாடி எரிக்கப்பட்ட சமயத்தில் எந்தவிதமான மீன்பிடி உபகரணங்களும் வாடிக்குள் வைக்கப்படாத காரணத்தினால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடந்த வருடமும் மீனவரின் கரைவலை வாடி இவ்வாறு இனந்தெரியாதவர்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பமும் பதிவாகியிருந்த நிலையில்,

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments