Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து அப்டேட்

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உருவெடுத்ததிலிருந்து கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் அடுத்தடுத்து மதராஸி, பராசக்தி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இதில், பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.

இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் குட் நைட் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments