இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா?.. பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா?… ‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா’ என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே; சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா?.. உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்?. “எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா” என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா?… உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா?. முதுமை – மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், முதுமை வயதுபார்த்து வருகிறது; மரணம் வயதுபார்த்து வருவதில்லை. சாவுக்குக் கண்ணில்லை. எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்” என்று தெரிவித்துள்ளர்.
சாவுக்கு கண்ணில்லை… நடிகர் மனோஜ் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


