Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சம்பளத்தை குறைத்த அஜித்!

சம்பளத்தை குறைத்த அஜித்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதன்பின், மீண்டும் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்தார்.

ஆனால், AK 64 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதி செய்யாததால் அறிவிப்பு வெளிவர தாமதம் என்கின்றனர்.

இந்நிலையில், அஜித் தனது சொந்த தயாரிப்பில் தனது 64 ஆவது திரைப்படத்தை தயாரிக்கப்போகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இதற்கு முன் AK 64 படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதற்கு முன் ஏஜிஎஸ் நிறுவனத்தை அணுகியபோது அஜித் 183 கோடி ரூபா சம்பளம் கேட்டுள்ளார்.

மேலும், படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது என ஏஜிஎஸ் நிறுவனம் நிராகரித்து விட்டது. இதன்பின் தற்போது இரண்டாவது முறையாக தனது சம்பளத்தில் ரூ.20 கோடியை அஜித் குறைத்துக்கொண்டு, ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இப்படத்தை தயாரிக்க கேட்டுள்ளனர்.

ஆனால், தற்போதும் பட்ஜெட் அதிகமாக உள்ளது என்று ஏஜிஎஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின், அஜித் என்ன முடிவு செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments