Saturday, July 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சமையல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று (03) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாயாகவும்

5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 118 ரூபாயினால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாயாகவும்

2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 55 ரூபாயினால் குறைக்கப்பட்டு 835 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 280 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 4,965 ரூபாயாகவும்

5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 512 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,988 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments