Wednesday, September 2, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சமரி அத்தப்பத்து புதிய தரவரிசை சாதனை

சமரி அத்தப்பத்து புதிய தரவரிசை சாதனை

மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் இருபதுக்கு 20 தரவரிசையில் தனது சிறந்த நிலைகளைப் பதிவு செய்துள்ளார்.

துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 3ஆவது இடத்தையும், பந்துவீச்சுத் தரவரிசையில் 33ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.

இதேவேளை, மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது. போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments