Tuesday, March 17, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சகலவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் பியூஸ் சௌலா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்

சகலவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் பியூஸ் சௌலா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சௌலா, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

2007 ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம் (50 ஓவர்) ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் உலக சம்பியனான இந்திய அணியில் முக்கிய பங்காற்றி இருந்தார்.

இந்த வருடம் நடைபெற்ற இண்டியன் ப்றிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

2008இலிருந்து 16 இண்டியன் ப்றீமியர் லீக் அத்தியாயங்களில் பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் இலவன் பஞ்சாப்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக விளையாடியிருந்தார்.

இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் 7 விக்கெட்களையும் 25 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 32 விக்கெட்களையும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

137 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 446 விக்கெட்களையும் 297 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 319 விக்கெட்களையும் 164 முதல்தர ஒருநாள் கிரிக்கெட் பேர்டிகளில் 254 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

192 ஐபிஎல் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 192 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments