Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கோவை: ஈஷா மையத்தில் மத்திய மந்திரி அமித்ஷா வழிபாடு

கோவை: ஈஷா மையத்தில் மத்திய மந்திரி அமித்ஷா வழிபாடு

கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மதியம், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் இன்று மாலை சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைந்த மத்திய மந்திரி அமித்ஷா, அங்கு துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். பின்னர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அவர் வழிபட்டார்.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.

அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments