கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயிலில் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ரயில் நிலையத்தில், குறித்த ரயிலின் சிற்றுண்டிச்சாலை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சோதனை நடத்தியூள்ளனர்.
இதன்போது, 120 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்ட குடிநீர் போத்தல் ஒன்று 150 ரூபாய்க்கு விற்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து நுகர்வோரிடம் அதிக விலை வசூலித்த சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


