கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெல்வத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (28) கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


