இலங்கை, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்குபற்றும் மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் யாவும் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடுவதுடன் போட்டிகள் நிறைவில் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் மே 11ஆம் திகத நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.
போட்டி விபரங்கள்
ஏப்ரல் 27: இலங்கை எதிர் இந்தியா
ஏப்ரல் 29: இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா
மே 1: இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா
மே 4: இலங்கை எதிர் இந்தியா
மே 6 தென் ஆபிரிக்கா எதிர் இந்தியா
மே 8: இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா
மே 11: இறுதிப் போட்டி


