இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் (வயது 101). ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011வரை கேரள முதல்-அமைச்சராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, திருவனந்தபுரத்தில் வீட்டில் இருந்த அச்சுதானந்தனுக்கு 23ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் தொடந்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சுதானந்தனை முதல்-அமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர் அச்சுதானந்தனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
கேரள முன்னாள் முதல்-அமைச்சர் அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


