Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் ‘கொம்புசீவி’ படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். தற்போது, சின்ன கேப்டன் என்று அழைக்கும் விதத்தில் சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். தான் நடிக்கும் ‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார். இது குறித்து பேசிய சண்முகபாண்டியன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி ‘கொம்புசீவி’ படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்,” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments