நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ‘மெய்யழகன்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது. கார்த்தி நடிக்கும் 26-வது படமாக ‘வா வாத்தியார்’ உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தின் முதல் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்தி நடித்த `வா வாத்தியார்’ படத்தின் வெளியீடு பதிவேற்றம் கொடுத்த படக்குழு
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


