Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது – படக்குழு

‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது – படக்குழு

கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘காஞ்சனா’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019-ல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ‘காஞ்சனா 4’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராகவேந்திரா புரொடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிக்கிறது. ராகவா லாரன்ஸ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். பூஜா ஹெக்டே நடிக்க உள்ள நிலையில், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை, ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments