கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நியமனத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றும் திறமையான தொழிலாளர்களுக்குப் புதிய விண்ணப்ப அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அக்டோபர் எட்டாம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வில், மருத்துவம், கட்டுமானம், குழந்தை பராமரிப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த குறைந்தது 284 தகுதியான நபர்களுக்கு மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் கட்டுமானத் துறை சார்ந்த பணிகளுக்கு அதிகபட்சமாக 115 அழைப்புகள் 94 என்ற குறைந்தபட்ச தகுதிப் புள்ளியுடன் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்புத் துறைக்கு 99 குறைந்தபட்ச புள்ளிகளுடன் 86 அழைப்புகளும், சுகாதாரத் துறைக்கு 76 குறைந்தபட்ச புள்ளிகளுடன் 82 அழைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கால்நடை பராமரிப்புப் பிரிவில் 86 புள்ளிகள் பெற்ற ஐந்துக்கும் குறைவான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


