Wednesday, March 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த வெள்ளரிக்காய் வகைகளில் சல்மோன்லா பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மற்றும் ஏனைய கனடிய மாகாணங்களிலும் இந்த வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சன்பிட் என்ற நிறுவனத்தினால் இந்த வெள்ளரிக்காய் வகைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments