Wednesday, August 5, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் திரும்பப் பெறப்படும் சாக்லேட்கள்!

கனடாவில் திரும்பப் பெறப்படும் சாக்லேட்கள்!

பிரபல சாக்லேட் நிறுவனமான ‘ஹெர்ஷிஸ்’, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது ‘ஹெர்ஷிஸ் கிஸஸ்’ சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

சாக்லேட்டின் மூலப்பொருள் விபரப் பட்டியலில் குறிப்பிடப்படாமல், அவற்றில் பாதாம் பருப்பு கலந்திருக்கக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடா உணவு ஆய்வு முகமை சனிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பாதாம் பருப்பு அலர்ஜி அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தச் சாக்லேட்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

மீறி உட்கொண்டால், அது கடுமையான அல்லது உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.

திரும்பப் பெறப்படும் சாக்லேட்களை வாடிக்கையாளர்கள் உடனடியாகக் குப்பையில் வீசிவிட வேண்டும் அல்லது வாங்கிய கடைகளிலேயே கொடுத்து முழுத் தொகையையும் ரீஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹெர்ஷிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியும் பணத்தைத் திரும்பப் பெற முடியும். இச்சாக்லேட்கள் 2026 மே 6 முதல் ஜூலை 28 வரை கனடாவிற்குள் மட்டுமே விநியோகிக்கப்பட்டதாக ஹெர்ஷிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான லார்ட் எண்கள் மற்றும் காலாவதி திகதிகள் தொடர்பான முழு விபரங்களை ஹெர்ஷிஸ் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ‘காட்பரி’ நிறுவனமும் தனது ‘டெய்ரி மில்க் ஓரியோ’ சாக்லேட்டில், பட்டியலில் குறிப்பிடப்படாத பிஸ்தா பருப்புகள் கலந்திருந்ததால் அதனைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments