Friday, October 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

கனடாவில் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

கனடாவின் டொராண்டோ நகருக்கு வடக்கே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்து இன்று (22) அதிகாலை சுமார் 4.30 மணியளவில், ஜேன் வீதி மற்றும் டேவிஸ் டிரைவ் சந்திப்புக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நெடுஞ்சாலை 400 முதல் கீல் வீதி வரையிலான டேவிஸ் டிரைவ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments