Tuesday, October 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவிலிருந்து பிரிவதற்கு அல்பேர்ட்டா மக்கள் எதிர்ப்பு!

கனடாவிலிருந்து பிரிவதற்கு அல்பேர்ட்டா மக்கள் எதிர்ப்பு!

எண்ணெய் வளம் மிக்க அல்பேர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாகச் செல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஒக்டோபர் 19) கட்டுப்பாடற்ற வாக்கெடுப்பொன்றை நடத்தியுள்ளது.

எனினும், பிரிவினைக்கு ஆதரவான தரப்பினர் தோல்வியைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விவகாரம் வாக்கெடுப்புடன் முடிவுக்கு வந்துவிடாது எனப் பலரும் கருதுகின்றனர்.

கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து, அல்பேர்ட்டா வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் கனடாவிலிருந்து பிரிவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், பொருளாதார ரீதியிலான அதிருப்தி, மாகாணத்தின் சுதந்திரத்தைக் கோரும் இயக்கத்துக்கு வலுசேர்த்துள்ளது.

சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் அல்பேர்ட்டா மாகாணம், கனடாவின் முக்கிய எரிசக்தி மையமாகத் திகழ்கிறது. அதன் பொருளாதாரப் பங்களிப்புக்கு உரிய பலன்கள் கிடைப்பதில்லை என்ற அதிருப்தியும் பிரிவினைக் கோரிக்கைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் பிரிவினை இயக்கம், கனடாவின் இறைமையைப் பாதுகாப்பதைத் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ள பிரதமர் மார்க் கார்னிக்கு மேலும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக வரிகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தொடர்ச்சியான கருத்துகளுக்கு மத்தியில் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

ஒட்டாவாவைத் தலைமையிடமாகக் கொண்ட லிபரல் கட்சி தலைமையிலான மத்திய அரசு, சுற்றுச்சூழல் கொள்கைகள் மூலம் கன்சர்வேட்டிவ் கட்சி ஆளும் அல்பேர்ட்டாவின் எண்ணெய்த் தொழில்துறையைக் கட்டுப்படுத்துவதாகப் பிரிவினை ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், அல்பேர்ட்டா கனடாவின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதைவிட, அதற்குக் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

பிரிவினைக்கு ஆதரவாக விளம்பர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ‘பாத்வே டு இன்டிபென்டன்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கோரி மோர்கன், கனடாவின் தற்போதைய அமைப்பு முறை மாகாணங்களுக்கிடையில் சமநிலையற்ற நிலையை உருவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments