Tuesday, March 17, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கடலூரில் ஆம்னி பேருந்தில் ரூ. 35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – காவல்துறை விசாரணை

கடலூரில் ஆம்னி பேருந்தில் ரூ. 35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – காவல்துறை விசாரணை

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது அதனை நிறுத்தி காவல்துறை சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்த கைப்பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது கட்டுகட்டாக பணம் இருந்தது. இதனை பார்த்த காவல்துறை அதிர்ச்சி அடைந்து உடனடியாக 57 வயது மதிக்கத்தக்க நபரையும் பணத்தையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது காவல்துறை பணத்தை எண்ணியபோது ரூ.35 லட்சம் இருந்தது என தெரிய வந்தது. மேலும் இந்த நபர் குறித்தும், பணம் எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். சமீப காலமாக கடலூர் வழியாக லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments