Thursday, March 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.பி.எல். 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்?

ஐ.பி.எல். 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்?

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியது. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை டெல்லி வாங்கியது.

கே.எல். ராகுலை கழற்றி விடும் முன்பே லக்னோ அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments