Thursday, November 21, 2024
spot_img
Homeஇலங்கை செய்திகள்எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் - காஞ்சன அரசாங்கத்திடம் கோரிக்கை

எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – காஞ்சன அரசாங்கத்திடம் கோரிக்கை

எரிபொருள் விலை தீர்மானிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொண்ட விலை சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டு்ம் என பதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரும் எரிசக்தி மற்றும் புதுப்பிக்க சக்தி முன்னாள் அமைச்சருமான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் எரிபொருள் தொடர்பில் விலை தீர்மானிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். தலைவரின் இந்த கூற்று கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இந்த கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை தீர்மானிக்கப்படுவது, ஏனைய நிறுவனங்களின் இலாம், உற்பத்தி செலவின் அடிப்படையில் அல்ல. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சுயாதீன நிறுவனமாகவே செயற்பட்டு வருகிறது. கடந்த 18 மாதங்களாக எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயற்படுவதே இவர்களின் கடமை.

கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர்கள் எரிபொருள் விலை தீர்மானிப்பது தொடர்பில் நாட்டுக்கு பிழையான கருத்தை தெரிவித்து, வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்துக்கு செல்வற்கு முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் நாட்டுக்கு ஒரு விடயத்தை தெரிவிக்கும்போது ஒப்பந்தங்களை சரியானமுறையில் வாசித்து பார்க்க வேண்டும். அதுதொடர்பான புரிதல் இல்லை என்றால் எமக்கு தெளிவுபடுத்த முடியும்.

இந்த துறையில் போதுமான அனுபவம் இல்லாமையே இவ்வாறான தவறான கருத்துக்களை இவர்கள் தெரிவித்து வருகின்றனர். விலை தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கலாம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்வதா நிராகரிப்பதா என தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் வேறு நிறுவனங்களின் இலாப நட்டத்தின் அடிப்படையில் விலை நிர்ணயித்ததில்லை.

அத்துடன் கடந்த 18 மாதங்களாக எரிபொருள் விலை சூத்திரத்திற்கமையவே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் விலை சூத்திரத்தையும் வெளிப்படுத்தி இருந்தேன்.அல்லது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தேன்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் அது விலை சூத்திரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கிறார். ஆனால் விலை சூத்திரத்தின் பிரகாரமே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிக்கிறார். இருந்தாலும் விலை சூத்திரத்தை அரசாங்கம் மறைத்துள்ளது. அதனால் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொண்ட விலை சூத்திரத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க தலைவராக இருந்தமைக்காக, குறைந்த அனுபவம் உள்ள ஒருவரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தலைவராக நியமித்துள்ளதன் மூலம் நிதி முகாமைத்துவத்தின் பலமான நிலையில் இருக்கும் இந்த நிறுவனம் வீழ்ச்சியடைய நீண்ட காலம் செல்லாது என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments