Monday, March 16, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்எம்.ஐ. நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்

எம்.ஐ. நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். வெறும் 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலைியல் அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி டி20 லீக் (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடரில் எம்.ஐ. நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு எம்.எல்.சி தொடர் தொடங்கப்பட்டது. இதன் முதல் சீசனில் (2023) 388 ரன்கள் விளாசி அதிக ரன்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் அடித்து எம்.ஐ.நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் பவர் ஹிட்டராக திகழ்ந்து வருகிறார்.

2025ம் ஆண்டின் எம்.எல்.சி சீசன் நாளை தொடங்குகிறது. மொத்தம் ஆறு அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments