Wednesday, August 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உயிரைப் பறித்த விபத்து!

உயிரைப் பறித்த விபத்து!

வெள்ளவாய – மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.

 

விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வெள்ளவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர் வெள்ளவாய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

 

காயமடைந்த மற்றைய நபர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments