Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்உண்மையான களம் அ.தி.மு.க- தி.மு.கவுக்கு தான் – விஜய்யின் உரைக்கு ஜெயக்குமார் பதிலடி

உண்மையான களம் அ.தி.மு.க- தி.மு.கவுக்கு தான் – விஜய்யின் உரைக்கு ஜெயக்குமார் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்,” அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்” என்றார்.

விஜய்யின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “உண்மையான களம் அதிமுகக்கும் திமுகவுக்கும்தான்” என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ” தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் அவ்வாறு பேசியுள்ளார். ஆனால், உண்மையான களம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments