Tuesday, August 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

அண்மையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 20,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரு பொலிஸ் அதிகாரிகள் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், அதே பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றியதுடன் தற்போது அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

போதைப்பொருள் சந்தேகநபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு உதவுவதாகக் கூறியே குறித்த இலஞ்சத் தொகை பெறப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments