Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுகும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது பிரதமர் நேபாளத் தூதுவரை வரவேற்றதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையில் வசிக்கும் நேபாள நாட்டினர் எதிர்கொள்ளும் விசா தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமருடன் ஒரு பயனுள்ள உரையாடலில் ஈடுபட வாய்ப்பு கிடைத்ததற்கு நேபாள தூதுவர் நன்றி தெரிவித்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நேபாளத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஜே.எம்.ஐ.ஆர்.கே. ஜயசுந்தர பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சாகரிகா போகஹவத்த மற்றும் வெளியுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலுக கந்துருகமுவ உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளும் பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments