Sunday, March 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இரு நாடுகளுக்கு இடையில் விரிசல் ; கம்போடியா உடனான எல்லைகளை மூடுகிறது தாய்லாந்து

இரு நாடுகளுக்கு இடையில் விரிசல் ; கம்போடியா உடனான எல்லைகளை மூடுகிறது தாய்லாந்து

தென்கிழக்கு ஆசிய அண்டைய நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினை காரணமாக பதட்டங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்புக்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைவருக்கும் கம்போடியா உடனான எல்லைகளை தாய்லாந்து இராணுவம் மூடியுள்ளது.

கடந்த மாத இறுதியில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குறுகிய கால ஆயுத மோதல்களின் போது கம்போடிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டமையினால் இரு நாடுகளுக்கிடையிலானா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாய்லந்துக்கும் கம்போடியாவுக்குமான பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

இரு நாட்டு அரசாங்கங்களும் கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அதன்படி, அண்மையில் அனைத்து தாய்லாந்து எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிகளையும் கம்போடியா நிறுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கம்போடியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாகாணங்களில் உள்ள அனைத்து நில எல்லை சோதனைச் சாவடிகளிலும் அனைத்து வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கடப்பது கட்டுப்படுத்தப்படும் என தாய்லாந்து இராணுவம் திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், மாணவர்கள் மற்றும் பிற அவசர விடயங்கள் போன்ற மனிதாபிமான காரணங்களுக்காக சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புப் பிரிவுகளின் விருப்பப்படி எல்லைகளை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப, குறிப்பாக தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பகுதிகளில் அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதலை நிவர்த்தி செய்வதில்” கட்டுப்பாடுகள் உள்ளன, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்களன்று தாய் பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ராவால் அறிவிக்கப்பட்ட கம்போடியாவில் உள்ள சட்டவிரோத மோசடி மையங்களை ஒடுக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் துணைபுரியும் என இராணுவம் தெரிவித்தள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளுக்கு மின்சாரம் உட்பட அத்தியாவசியப் பொருட்களை எல்லை தாண்டிய விநியோகத்தை தாய்லாந்து நிறுத்தும் என பிரதமர் பேடோங்டார்ன் தெரிவித்தார்

எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதத்தத்தினால் பிரதமர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுக்கும் அவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் கசிய விடப்பட்டதை தொடர்ந்து, தாய்லாந்து மூத்த இராணுவத் தளபதியை அவர் இழிவுபடுத்திய செயலாக கருதப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments