Wednesday, September 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவுக்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments