Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்று இடியுடன் கூடிய மழை!

இன்று இடியுடன் கூடிய மழை!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேவேளை சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய, இன்று (07) மதியம் 12:08 மணிக்கு மிரிஸ்ஸ, கம்புருகமுவ, மாத்தறை, தெவுந்தர, கந்தர மற்றும் தலல்ல ஆகிய இடங்களில் சூரியன் உச்சத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments