இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு:- “பீல்டிங்கிலும் கொஞ்சம் பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய அணி அந்த துறையில் உயர்தரத்தை எட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. நான் எங்களுடைய பீல்டிங் பயிற்சியாளருடன் கடினமாக வேலை செய்வேன். அது களத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சி. இது நான் பந்து வீசிய மிகவும் சிறந்த தொடர்.
ஆனால் இன்னும் முன்னேறுவதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. சில பந்துகள் மிகவும் நெருக்கமாக இருந்தது. அதை பவுலிங் செய்திருக்கக் கூடாது. அதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இங்கிலாந்து சிறந்த அணி. இவை அனைத்தும் சரியான பந்துகளை சரியான நேரத்தில் வீசுவதை பற்றியதாகும். அதற்காக நான் உழைத்து வருகிறேன்.
இந்த விருது ஸ்பெஷலானது. இதை நான் என்னுடைய மகன், மனைவி மற்றும் பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். மேலும் சூர்யகுமார் மற்றும் கம்பீர் ஆகியோர் எனக்கு கொடுத்த ஆதரவுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.


