Sunday, March 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகை சரிவு; சீனர்களை குறிவைக்கும் மாலத்தீவு

இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகை சரிவு; சீனர்களை குறிவைக்கும் மாலத்தீவு

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த ஆண்டு பதவியேற்றபின் இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது.

நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் வெறும் 28,604 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவு சென்றுள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 54,207 இந்தியர்கள் மாலத்தீவு சென்றிருந்தனர்.

எனவே சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலத்தீவு கவனம் செலுத்துகிறது. இதற்காக அங்குள்ள 4 பெரிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் பீஜிங், ஷாங்காய், செங்டு மற்றும் ஜியான் நகரங்களுக்கு பெரிய விமானங்களை இயக்க மாலத்தீவு முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடங்களை மாலத்தீவு விமானப்போக்குவரத்து மந்திரி முகமது அமீன் அறிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments