Tuesday, March 17, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'இட்லி கடை' படத்துடன் மோதும் 'மதராஸி'

‘இட்லி கடை’ படத்துடன் மோதும் ‘மதராஸி’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தானே இயக்கி நடித்து வரும் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மதராஸி’ படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

இந்த இரண்டு படங்களும் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments