Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அஹுங்கல்லவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது !

அஹுங்கல்லவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது !

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அஹுங்கல்ல மற்றும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, 11 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 54,700 ரூபாய் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments