Wednesday, October 14, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அல்பர்ட்டா வாக்கெடுப்பு: முன்கூட்டிய வாக்களிப்பு ஒக்டோபர் 16 வரை!

அல்பர்ட்டா வாக்கெடுப்பு: முன்கூட்டிய வாக்களிப்பு ஒக்டோபர் 16 வரை!

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டு வாக்கெடுப்புக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 16ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

வாக்கெடுப்பு ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களிக்கத் தகுதியானவர்கள் தங்களது வீட்டு முகவரியைப் பயன்படுத்தி வாக்களிப்பு நிலையத்தைக் கண்டறிய முடியும்.

வாக்களிப்பதற்கு கனேடியக் குடியுரிமை பெற்றிருப்பதுடன், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் அல்பர்ட்டா மாகாணத்தில் சாதாரண வதிவிடத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

முன்கூட்டிய வாக்களிப்பின்போது, தங்களது தேர்தல் தொகுதிக்குள் உள்ள எந்தவொரு முன்கூட்டிய வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும். எனினும், வாக்கெடுப்பு நாளில் தங்களது வீட்டு முகவரிக்கு ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்காளர் தகுதிகள் தொடர்பான மேலதிக தகவல்களை அல்பர்ட்டா தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments