சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில் அமைச்சர் துரைமுருகனுக்கு தோல்பட்டை எலும்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து லேசான காயம் காரணமாக துரைமுருகனுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார். தற்போது அமைச்சர் துரைமுருகன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின்
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


