அநுராதபுரத்தில் கவரக்குளம் பொலிஸ் பிரிவின் தரியங்குளம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (17) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம், கவரக்குளம் தரியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 947க்கும் அதிகமான போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய தரியங்குளம் , குருந்தங்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


