Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து

2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ஆகிய விருதுகளை மத்திய அரசு நேற்று (ஜன.,25) அறிவித்தது. இதில் கலைத்துறைக்கான பிரிவில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித்துக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம், நடிகர்கள் தனுஷ், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜான் கொகென், சரத்குமார், சசிகுமார், சிரஞ்சீவி, நந்தா, பாபி சிம்ஹா, பாலாஜி முருகதாஸ், நடிகைகள் பார்வதி, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் ராஜமவுலி, கார்த்திக் சுப்பராஜ், எஸ்ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments