Sunday, September 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹட்டன்-பலாங்கொடை வீதியில் பாரிய மண்சரிவு!

ஹட்டன்-பலாங்கொடை வீதியில் பாரிய மண்சரிவு!

ஹட்டன் பகுதியில் பெய்து வரும் கனமழையால் டிக்கோயா, வனராஜா தோட்டப் பகுதியில் ஹட்டன்–பொகவந்தலாவ,மஸ்கெலிய,பலாங்கொடை பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று (20) காலை சுமார் 11.00 மணியளவில் ஏற்பட்ட இந்த மண்சரிவு காரணமாக குறித்த வீதிப் பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து வீதியில் குவிந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அகற்றும் பணிகளை துரிதப்படுத்த தேவையான இயந்திரங்களை அனுப்புமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, இந்த வீதிப் பகுதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் பயணிக்குமாறு ஹட்டன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments