Tuesday, October 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஸ்பெயினில் நாடாளுமன்றம் கலைப்பு

ஸ்பெயினில் நாடாளுமன்றம் கலைப்பு

ஸ்பெயின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) அறிவித்துள்ளதோடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் ஒப் டெபுடீஸ் அவையில் மொத்தமாக 350 இடங்கள் உள்ளன. அவற்றில் 147 இடங்களை மட்டுமே பிரதமரின் சிறுபான்மை கூட்டணி அரசாங்கம் தன்வசம் வைத்திருக்கிறது.

பிரதமரின் சோசலிச கட்சி 121 இடங்களையும் இடதுசாரி கூட்டணியினர் 26 இடங்களையும் கொண்டுள்ளனர். எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 176 இடங்கள் தேவை என்ற நிலைப்பாடு காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஸ்பெயினில் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டு வாடகை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது. மாட்ரிட் நகரில் வாடகை செலுத்த முடியாததால் 87 வயது முதியவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் கடுமையான வாடகை உயர்வைக் கட்டுப்படுத்த பிரதமர் சான்செஸ் அரசு கொண்டுவந்த 2 அவசரச் சட்டங்களுக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுத் தோற்கடித்தன.

ஸ்பெயின் ஆளுங்கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவைக் கூட்டணிக் கட்சிகள் வாபஸ் பெற்றதால், அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டு நாடாளுமன்றச் செயற்பாடுகள் முடங்கின.

நாடாளுமன்ற முடக்கத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி ஸ்பெயின் நாடு அவசரப் பொதுத்தேர்தலைச் சந்திக்கும் என்றும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez)தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments