Thursday, March 19, 2026
spot_img
Homeஉலக செய்திகள்வியட்நாமில் சூறாவளி அபாயம்: 500,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

வியட்நாமில் சூறாவளி அபாயம்: 500,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

வியட்நாமில் சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதால் 500,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் வியட்நாம் வழியாக வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா நாங் ஆகிய இடங்களில் வசிக்கும் 586,000 பேர் தற்காலிகமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்

சூறாவளியுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அந்தப் பகுதியில் விமானச் சேவையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கஜிகி சூறாவளி சீனாவின் ஹைனான் பகுதியையும் பாதித்தது. மேலும் சூறாவளியுடன் 320 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments